நியூஸிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ரி-20 தொடரின், நான்காவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து 131 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 16.1 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 42 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பின் அலென் தெரிவுசெய்யப்பட்டார்.