சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களின் போது இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க G24 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் உருவான பல்வேறு புதிய நிதி மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள், பல வளரும் நாடுகளில் புதுப்பிக்கப்பட்ட அபாயங்கள் மற்றும் நிதிச் சுமைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் இணைந்து இலங்கையும் உயர் உணவுப் பணவீக்கம் உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள வேளையில், கடன் பிரச்சினைகள், கொடுப்பனவு சமநிலை பிரச்சினைகள் மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து தேவையான உதவிகளைப் பெறுவதற்கும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவது முக்கியம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.