இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவின் பொருளாதாரம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்புக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
இந்தியா தலைமை ஏற்றதும் ஜி 20 நாடுகளுடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வொஷிங்டனில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா, கடினமான காலங்களிலும்கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாக தெரிவித்தார்.
இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக இருப்பதாகக் கூறுவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.