எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா- சீனா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் தீவிர முயற்சியால், கிழக்கு லடாக்கில் இரு தரப்பினரும் படைகளை வாபஸ் பெற்ற நிலையில், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் எல்லைப் பகுதியில் சுமுக நிலையை ஏற்படுத்தவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் தொடர்ந்தும் பேச்சு நடத்த இரு நாடுகளின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.