முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், ஆனால் நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தான் நம்புவதாகவும் இலங்கைக்கான சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களை வெற்றிக் கொள்வதற்கு சீனா உதவிகளை வழங்குவதோடு சீன சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்கள் எனவும் இலங்கைக்கான சீன தூதுவர் இதன் போது உறுதியளித்தமை குறிப்பிடதக்கது.