காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.
இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி, அப்பதவியில் தொடர விரும்பாததால் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தேர்தலில், மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குகள் எதிர்வரும் 19ஆம் திகதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.
எனவே, இந்தத்தேர்தலில் கார்கே அல்லது சசிதரூரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்று, பதவி ஏற்றால், 24 ஆண்டுகளில் அப்பதவியை ஏற்கும் சோனியா காந்தியின் குடும்பத்தைச் சாராத முதல் நபர் எனும் பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.