ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க்கையில் முதல் முறையாக மதிப்புமிக்க பலோன் டி’ஓர் விருதை வென்றுள்ளார்.
கடந்த சீசனில் ரியல் மெட்ரிட் அணி, சம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்காற்றிய பென்சிமா, 1998இல் ஸினடின் ஸிடனுக்குப் பிறகு பலோன் டி’ஓர் விருதை வென்ற முதல் பிரான்ஸ் வீரர் ஆவார்.
பலோன் டி’ஓர் விருதுப் போட்டியில், நட்சத்திர வீரர்களான ரொபர்ட் லெவன்டோவ்ஸ்கி, சாடியோ மானே மற்றும் கெவின் டி ப்ரூய்ன் ஆகியோரை பின்தள்ளி பென்சிமா பலோன் டி’ஓர் விருதை வென்றுள்ளார்.
1956இல் முதல் பெறுநரான ஸ்டான்லி மேத்யூஸுக்குப் பிறகு, மிகவும் வயதான வெற்றியாளராக 34 வயதான பென்சிமா தனது பெயரை பதிவுசெய்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) பரிஸில் நடந்த விழாவில் விருதைப் பெற்றபோது, உணர்சி பொங்க பேசிய பென்சிமா,
‘நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது தொழிலைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது மக்களின் தங்கப்பந்து’ என கூறினார்.