இலங்கையில் மக்கள் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் Clement Voule வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலைமையை தமது அலுவலகம் உன்னிப்பாக அவதானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டக்காரர்களை பாதுகாக்கும் கடமை சட்ட அமுலாக்கத்திற்கு உள்ளது என்றும் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க பாதுகாப்பான மற்றும் ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.