கொழும்பு – கண்டி வீதி களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் மூடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறும் பாதையில் பல்வேறு இடங்களில் பொலிஸார் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.














