மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் நடத்தையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலங்கையின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்மைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், மனித உரிமைகள் பேரவையின் இந்த நடவடிக்கை அரசியல் பின்புலத்தை கொண்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மீறல்கள் தொடர்பாக, உள்ளக பொறிமுறை ஊடான விசாரணையையே அவசியம் என்றும் அலி சப்ரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொறிமுறையை அமைக்க செயற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதவேளை இலங்கையின் இறையாண்மையை சீர்குலைக்காமல் சர்வதேச அமைப்புக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.