நிதி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றில் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசாரணைகளின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவரை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலக வர்த்தக மையத்தில் இயங்கி வரும் நிதி நிறுவனத்தில் பல பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக திலினி பிரியமாலி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தகர்கள் மற்றும் உயரதிகாரிகளிடம் இருந்தும் பணத்தை மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.