ரஷ்யாவிடம் இருந்து 16 ஹெவி-லிஃப்ட் ஹெலிகொப்டர்களை வாங்குவதற்கான 215 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்த பின்னர், தனது நாடு அமெரிக்காவிலிருந்து இராணுவ ஹெலிகொப்டர்களைப் பெறுவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் ஏற்படும் என்ற அச்சத்தில் ரஷ்யாவிடம் இருந்து ஹெலிகொப்டர்கள் பெறுவதை பிலிப்பைன்ஸ் இரத்து செய்தது.
இப்போது இரத்துசெய்யப்பட்ட ரஷ்ய எம்.ஐ.17 ஹெலிகொப்டர்களுக்கான பல மில்லியன் டொலர்கள் வைப்புத்தொகையில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது ரஷ்யா திரும்பப் பெற பிலிப்பைன்ஸ் முயல்கிறது என்று மார்கோஸ் ஜூனியர் என கூறினார்.
மே மாதம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்கோஸ் ஜூனியர் ஒரு வணிக மன்றத்தில் கூறுகையில், ‘நாங்கள் அமெரிக்காவிடமிருந்து மாற்று விநியோகத்தைப் (ஹெவி-லிஃப்ட் ஹெலிகொப்டர்களுக்கு) பெற்றுள்ளோம்.
துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் ஒரு முன்பணத்தை (ரஷ்ய உற்பத்தியாளருக்கு) செலுத்தினோம், அதில் குறைந்தபட்சம் ஒரு சதவீதத்தையாவது திரும்பப் பெற நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று நம்புகிறோம்’ என்று கூறினார்.
ஆனால், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் இருந்த ஒப்பந்தம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸிற்கான ரஷ்ய தூதர் மராட் பாவ்லோவ் உள்ளூர் ஊடகங்களுக்கு, ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் ஹெலிகொப்டர் ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்றும் கூறினார்.