நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்திற்குப் பிறகு புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் 1ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருவன்வெல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்துள்ளார் .
முன்னதாக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி மாத வருமானம் பெறுபவர் ரூ. 100,000 அல்லது அதற்கு மேல் வருமான வரி செலுத்த வேண்டியிருப்பதோடு உயர்ந்த தனிநபர் வருமான வரி விகிதம் 36% உயர்துள்ளது.

















