வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 2 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.35 மணி நிலவரப்படி 2 இலட்சத்து 54 ஆயிரத்து 938 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக இலங்கையைவிட்டு வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.