யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 9 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று (புதன்கிழமை) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே, அவர்களை தலா 5 இலட்சம் ரூபாய் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை செலுத்தியதாக பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள் பொலிஸில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.