ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர், பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார்.
கடன் வழங்குநர் மாநாடு மற்றும் கடன் மறுசீரமைப்பின் ஆரம்ப நடவடிக்கைகள் குறித்து இதன்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்து, அதற்குரிய பதிலை உடனடியாக அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.