அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை அரசியலமைப்புக்கு முரணானதாக அறிவிக்கக் கோரி இதுவரை 6 மனுக்கள் உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் ஏனைய பிரஜைகளால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
உத்தேச சட்டமூலத்தின் மூலம் ஒருவர் வரி செலுத்த வேண்டிய மாத வருமான வரம்பு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 21ஆம் திகதி அரசாங்கம் உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.