லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவான ‘பொன்னியின் செல்வன் பாகம்-01’ திரைப்படம், ஓடிடியில் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை தழுவி மணி ரத்னத்தின் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன் பாகம்-01’ திரைப்படம், 25 நாட்களைக் கடந்து 450 கோடி ரூபாய் வசூலைக் கடந்து 500 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தற்போது படம் பார்க்க வேண்டுமென்றால் அமேசான் பிரைம் ஓடிடியில் அதன் சந்தாதாரர்கள் உள்பட அனைவரும் 199 ரூபாய் கட்டணம் செலுத்தித்தான் பார்க்க முடியும். 199 ரூபாய் செலுத்திய திகதியில் இருந்து 30 நாட்களுக்குள் படத்தைப் பார்த்து விட வேண்டும்.
மேலும் படம் பார்க்க ஆரம்பித்த 48 மணி நேரத்துக்குள் படத்தைப் பார்த்து முடித்து விட வேண்டும். படத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியாது.
மேலும் அடுத்த 7 நாட்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நவம்பர் 4 முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகவுள்ளது. அப்போது அமேசான் பிரைம் சந்தாதாரர்களால் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்க முடியும்.