ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இதற்கமைய கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபாய் முதல் 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே, இன்று முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை திறந்த கணக்கு முறையின் ஊடாக இலங்கைக்குள் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.