எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷ்ய தாக்குதல்கள் காரணமாக, உக்ரைனில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக சுமார் நான்கு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் கிவ்வில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்வெட்டு, கிவ் மட்டுமல்ல, டினிப்ரோ நகரம் உட்பட உக்ரைனின் மத்திய பகுதிகளையும் தாக்குகின்றன. மின்வெட்டு மக்களின் வீடுகளில் உள்ள அசௌகரியத்தைத் தவிர, வீதி விளக்குகள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிறது.
உக்ரைனின் இரண்டாவது நகரமான கார்கிவ், ரஷ்ய ஷெல் தாக்குதலால் பெரிதும் சேதமடைந்துள்ளது, மத்திய நகரங்களான சைட்டோமிர், பொல்டாவா மற்றும் செர்னிஹிவ் ஆகியவற்றுடன் நீண்ட மின்வெட்டுகளையும் எதிர்கொள்கிறது.
இரண்டு வாரங்களுக்கும் மேலாக பழுதுபார்ப்பு நடந்து வருவதாகவும் சேதமடைந்த உபகரணங்கள் தனித்துவமானது என்பதால், அதே பாகங்களைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புக்களை குறிவைக்கும், ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஷாஹெட்-136 காமிகேஸ் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.