தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் பங்கேற்றிருந்தார்.
ஹட்டன் டிக்கோயா,என்பீல்ட்,ஒட்டரி பிரதேசத்தில் இன்று ( ஞாயிற்க்கிழமை) தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சிலர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.