மக்களின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க உயர் நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் தலையீட்டிற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இதனைத் தெரிவித்தார்.
மேலும் விஜித் மலல்கொட மற்றும் எம்.சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.