நாட்டில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை பிற்பகல் 2.30 வரை இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அதன்படி பதுளை கண்டி, கேகாலை, குருனாகலை, மாத்தறை, மொணராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு, மேல், ஊவா, மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று காலை 8.30 வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் வேவல்தலாவ பகுதியில் பதிவாகியுள்ளதோடு அங்கு 200.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.