நாளை இடம்பெறவுள்ள போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொண்டால் அது சுற்றுலாத் துறைக்கு இடையூறாக அமையும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவுக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் அந்த குணங்கள் அவரால் காட்ட முடிந்திருந்தால் இன்று நாட்டின் ஜனாதிபதியாக அவர் இருந்திருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் சுற்றுலாத்துறை தற்போது வளர்ச்சியடைந்து வருவதாகவும் அதனை மீண்டும் தரைமட்டமாக்க வேண்டாம் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்தார்.