சீர்திருத்தங்கள் மற்றும் பெரியளவிலான உள்கட்டமைப்பு போன்றவற்றில் புதிய இந்தியா கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடித்தளத்தில் இருந்து பணியாற்றுதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பெங்களூருவில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை காணொலி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், இந்திய பொருளாதாரம் மீது பலர் நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.