• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/07
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடுக்காக இன்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026 நவம்பர் 12 ஆம் திகதி வியாழக்கிழமை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை (வரவுசெலவுத் திட்ட உரை) மேற்கொள்வதற்கும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. 

இதற்கமைய, நவம்பர் 20 ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21 ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும். 

அத்துடன், இந்த அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் மு.ப 9.30 மணிக்கு கூடவுள்ளது.

அதற்கமைய, அனைத்து நாட்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன் பின்னர், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான 5 கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் ஒரு கேள்விக்குமாக நேரம் ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, விவாதம் மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்கெடுப்புகள் நடைபெறும் இரண்டு நாட்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் 50:50 என்ற விகிதாசார அடிப்படையில்  ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

மேலும், இரண்டாம்  மதிப்பீடு மீதான விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் என்ற அடிப்படையிலும், குழுநிலை விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் என்ற அடிப்படையிலும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு  இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், அமைச்சொன்றின் செலவினத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்பட்டால், அது குறித்த தினத்தின் இறுதியில் பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: 2027 Appropriation BillParliamentஒதுக்கீட்டுச் சட்டமூலம்நாடாளுமன்றம்ஜகத் விக்கிரமரத்ன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயம்!

Related Posts

வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு
இலங்கை

அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயம்!

2026-10-07
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-07
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

2026-10-06
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!
இலங்கை

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

2026-10-06
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
இலங்கை

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

2026-10-06
மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!
இலங்கை

மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

2026-10-06
Next Post
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயம்!

0
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

0
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

0
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயம்!

2026-10-07
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2026-10-07
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-07
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

2026-10-06
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

2026-10-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: