வட கொரியா குறைந்தபட்சம் ஒரு நீண்ட தூரம் மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
வடகொரியா ஒரே நாளில் நேற்று 23க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவிய பின்னர், இன்று தென் கொரியாவின் பிராந்திய கடல்களுக்கு அருகில் தரையிறங்கிய ஒன்று உட்பட இந்த புதிய ஏவுதல்கள் வந்துள்ளன.
இந்த ஏவுதல்களுக்கு பதிலளித்த தென்கொரியா மூன்று ஏவுகணைகளை ஏவியது.
வடகொரியாவின் ஏவுதல்களைத் தொடர்ந்து, அதன் வடக்குப் பகுதிகளில் சில குடியிருப்பாளர்களுக்கு ஒரு அரிய அவசர எச்சரிக்கையை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியது. இது அவர்களை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியது.
ஜப்பான் ஆரம்பத்தில் ஏவுகணை ஜப்பான் மீது பறந்ததாக கூறிய போதிலும், பின்னர் அது ஜப்பானிய தீவுக்கூட்டத்தை கடக்கவில்லை எனவும் அது ஜப்பான் கடலில் மயமானதாகவும் பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா தெரிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் வெண்டி ஷெர்மனுடனான தொலைப்பேசி அழைப்பில், இந்த ஏவுதல்கள் வருந்தத்தக்கது, ஒழுக்கக்கேடானது என்று தென் கொரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன்-டாங் தெரிவித்தார்.