இந்தியாவில் ஆறு மாநிலங்களின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தெலுங்கானாவில் முனுகோடே, பீகாரின் கோபால்கஞ்ச், மோகம்மா, ஹரியானாவின் ஆதம்புர், உத்தரப்பிரதேசத்தின் கோலா கோக்ராநாத், ஒடிசாவின் தமன்நகர் ஆகிய தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
மும்பை அந்தேரி கிழக்குத் தொகுதியில் சிவசேனாவின் இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஷிண்டே ஆதரவு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
இதனிடையே, குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் திகதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.