இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்திற்கு ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் அவரது பாரியார் வருகை தந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்தனர்.
தலைமை காரியாலயத்தில் உள்ள மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுடைய உருவப் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
மேலும் மறைந்த தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம் முதல் இன்று வரை இ.தொ.காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு தொடர்பாகவும் இ.தொ.கா செய்து வரும் சேவைகள் குறித்தும் இதன்போது ஜப்பான் தூதுவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கணகராஜ், மூத்த அரசியல்வாதி மதியுகராஜா, இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் மரயா சக்தி மற்றும் கட்சியின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.