கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் ‘பிரிசிஸன் எயார்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், 19பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ‘தர் எஸ் சலாம்’ நகரிலிருந்து புகோபா விமான நிலையத்துக்கு பயணித்த குறித்த விமானம், தரையிலிருந்து 100 மீ. உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த 43 பேரில் 24 பேர் உயிர் பிழைத்துள்ளனர் என்று ஆபரேட்டர் பிரசிஷன் எயார்ர் தெரிவித்துள்ளது.
இரண்டு விமானிகளும் ஆரம்பத்தில் உயிர் பிழைத்து, காக்பிட்டில் இருந்து உள்ளூர் அதிகாரிகளிடம் பேச முடிந்தது ஆனால் அவர்கள் பின்னர் இறந்திருக்கலாம் என்று பிரதமர் காசிம் மஜாலிவா தெரிவித்துள்ளார்.
புகோபா விமான நிலைய ஓடுபாதையின் முடிவில் கரைக்கு அருகே விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்தவர்களில் சிலரை மீட்க மீட்புப் படையினர் தீவிரமாக செயற்பட்டனர்.