அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள போலந்தில் இரண்டு பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
உக்ரைனின் எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் செவ்வாய்கிழமை நடந்த மரணங்களுக்கு, ரஷ்யா தயாரித்த ஏவுகணையே காரணம் என போலந்து அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருப்பினும் எந்தவொரு ரஷ்ய ஏவுகணைகளும் போலந்து பிரதேசத்தைத் தாக்கவில்லை என்றும் இது ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏவுகணை ரஷ்யாவால் வீசப்பட்டது என்பது உறுதிசெய்யப்பட்டால், உக்ரைன் மீது படையெடுத்த பின்னர், மொஸ்கோவின் ஆயுதம் ஒன்று நேட்டோ நாட்டில் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
30 உறுப்பினர்களைக் கொண்ட நேட்டோ கூட்டணியின் அடித்தளம் ஒரு உறுப்பினருக்கு எதிரான தாக்குதல் என்பது அனைவரின் மீதும் தாக்குதல் என்ற கொள்கையாக இருப்பதால் ஏவுகணைத் தாக்குதல் தீவிர கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.