நாட்டில் குடிநீர் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நீர்பாசனத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான கலந்துரையாடலின் போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு லீற்றர் குடிநீருக்கு 5 சதமே கட்டணமாக அறவிடப்படுவதாகவும் அதன் விநியோக செலவுகள் 12 ரூபாவுக்கும் அதிகம் என்பதால் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.