இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் கனடிய வெளியுறவு அமைச்சர் மெலன் ஜோலிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
கிழக்காசிய உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து அவர் தனது டுவிட்டரில், ‘கனடிய வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதில் மகிழ்ச்சி.
உக்ரைன் மோதல், இந்தோ-பசிபிக் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சமூக நலன் பற்றி அவருடன் விவாதித்தேன்.
விசாக்களைப் பெறுவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பாராட்டுகிறேன்’ என பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக, முன்னதாக, ஜெய்சங்கர் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை சந்தித்து ரஷ்யா – உக்ரைன் போருக்கு இடையே தானிய ஏற்றுமதி முயற்சி மற்றும் அணுசக்தி விநியோகம் தொடர்பான கவலைகள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.
இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலையுதிர்காலத்தில் தனது அணுசக்தியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளார்.
உக்ரேனில் அத்தகைய ஆயுதத்தை அவர் பயன்படுத்தலாமா என்பது பற்றியும் ஜெய்சங்கர் அவதானம் செலுத்தியுள்ளார்.
ரஷ்யாவிடம் போர்க்களத்தில் வழக்கமான படைகளை தோற்கடிக்க வடிவமைக்கப்பட்ட 2,000 தந்திரோபாய அணு ஆயுதங்கள் உள்ளன,
இருப்பினும் அதன் எந்தவொரு தந்திரோபாய அணு ஆயுதமும் ஒருபோதும் போரில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் ஏவுகணை அல்லது பீரங்கி ஷெல் உட்பட பல வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் பயன்படுத்தப்படலாம்.
இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் இந்தோனேசியாவின் பிரிதமர் ஆகியோரையும் சந்தித்தார்.
அச்சந்திப்பை தொடர்ந்து, எனது நண்பரான சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. குறிப்புகளை மாற்றுவதில் எப்போதும் மகிழ்ச்சி’ என்று ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளதோடு,
இந்தியா-ஆசியான் ஈடுபாடுகளில் கம்போடியா முக்கியப் பங்காற்றியுள்ளது. முதல் இந்தியா – ஆசியான் உச்சிமாநாடு 2002ஆம் ஆண்டு கம்போடியாவின் முதல் தலைமைத்துவத்தின் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.