கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஒன்லைன் கற்றல் தளமான ‘அமேசான் அகெடமி’யை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
உயர்நிலைப்பாடசாலை மாணவர்களுக்கான போட்டித்தேர்வு, குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (துநுநு)க்கு பயிற்சியை வழங்கி வந்தது.
இதுகுறித்து அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக அமேசான் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவதற்காக அவ்வப்போது மதிப்பீடு செய்து வருகிறது.
தயாரிப்புகள், சேவைகளின் முன்னேற்றம் மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில், மதிப்பீட்டின் அடிப்படையில் அமேசான் அகெடமியை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த முடிவால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போது பயிற்சியில் உள்ள மாணவர்கள் 2024 ஒக்டோபர் வரை பயிற்சியைப் பெற முடியும். இந்தாண்டு தொகுப்பில் (பேட்ச்) சேர்ந்துள்ளவர்கள் தங்கள் முழுக்கட்டணத்தையும் திரும்பப் பெற முடியும்’ என்று கூறினார்.
அமேசான் கடந்த ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு ஒன்லைனில் பயிற்சி அளித்து வருகிறது. அடுத்த ஆண்டு ஒகஸ்ட் முதல் படிப்படியாக இந்த சேவையை குறைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.