பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொற்காலம் முடிந்துவிட்டது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
லண்டன் கில்டாலில் லார்ட் மேயர் விருந்தில் உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக், சீனாவின் மனித உரிமை மீறல்களை விமர்சித்தார்.
ஆனால் பிரித்தானியா, உலக விவகாரங்களில் சீனாவின் முக்கியத்துவத்தை வெறுமனே புறக்கணிக்க முடியாது’ என கூறினார்.
இந்த கோடைகால தலைமைப் பிரச்சாரத்தின் போது சுனக் சீனாவின் மீது மென்மையாக நடந்து கொள்வதற்காக விமர்சிக்கப்பட்டார். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது.
வெளியுறவுக் கொள்கையில் அவர் தனது நிலைப்பாட்டை வகுத்தபோது, ‘சீனாவுடனான எங்கள் அணுகுமுறையையும் நாங்கள் உருவாக்க வேண்டும்,’ என்று அவர் கூறினார்.
‘எங்கள் மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு சீனா ஒரு முறையான சவாலை முன்வைக்கிறது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், இது இன்னும் பெரிய சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் போது இது மிகவும் தீவிரமாக வளரும்’ என்று அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டில், அப்போதைய திறைசேரியின் தலைவர் ஜார்ஜ் ஆஸ்போர்ன், சீனாவும் பிரித்தானியாவும் இருதரப்பு உறவுகளின் ‘பொற்காலத்தில்’ இருப்பதாக சீன தூதரின் கூற்றுக்களை எதிரொலித்தார், ஆனால் 2020ஆம் ஆண்டு வாக்கில் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கத்தின் கீழ் உறவுகள் ஓரளவு மோசமடைந்தன.