வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மதப் பாடசாலை ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26பேர் காயமடைந்தனர்.
சமங்கன் மாகாணத்தில் உள்ள அய்பக் நகரில் மக்கள் தொழுகையை முடித்துக் கொண்டிருந்த போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் ஒன்பது முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என நம்பப்படுகிறது.
இதுவரை, இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை, மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் சிறுவர்கள் மற்றும் சாதாரண மக்கள் என்றும் உள்ளூர் மருத்துவமனையின் மருத்துவர் கூறினார்.
மோசமான காயங்களுடன் சில நோயாளிகள் சிறந்த சிகிச்சைக்காக சுமார் 120 கிலோமீட்டர்கள் (74 மைல்கள்) தொலைவில் உள்ள மசார்-இ-ஷெரீப்பில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உட்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபீ தாக்குர், தலிபான் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் குறித்து விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளுக்கு தண்டனை அளிப்பதாகவும் உறுதியளித்தார்.