அரசியலமைப்பு பேரவைக்கான நியமனத்தை தாமதப்படுத்துமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் விரைவாக நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேட்டுக்கொண்டார்.