நீண்ட காலமாக நீடித்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் பிரதமரை சந்திக்குமாறு மிகப்பெரிய ரயில் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள இரயில் தொழிலாளர்கள் கோடையில் இருந்து ஊதியம், வேலைகள் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பான வேலை நிறுத்ததத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் பிரதமரை சந்திக்குமாறு ரயில் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எழுதிய கடிதத்தில், ஆர்.எம்.டி. தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தையே இப்போது சிறந்த வழி என்று கூறினார்.
அடுத்த கட்ட வேலை நிறுத்தம் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு 48 மணி நேர வேலைநிறுத்தத்தின் போது பயணிகள் மிகவும் அவசியமானால் மட்டுமே ரயிலில் பயணிக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ரயில்கள் இருக்காது.
நெட்வொர்க் ரயில் மற்றும் 14 ரயில் நிறுவனங்களில் உள்ள ஆர்.எம்.டி. உறுப்பினர்களால் டி.எஸ்.எஸ்.ஏ மற்றும் யுனைட் தொழிற்சங்கங்களில் உள்ள மற்ற ரயில் தொழிலாளர்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்.