அணு ஆயுத சோதனைகள் இல்லாத உலகத்தை உருவாக்க இலங்கை உறுதிபூண்டுள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
வியன்னாவில் நடைபெற்ற 3வது CTBTO அறிவியல் இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அணு ஆயுத சோதனை குறித்து 1996 ஆம் ஆண்டு கையொப்பமிட்டதற்கு அமைவாக இலங்கை செயற்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த கருத்தரங்கில் சுமார் 80 நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், வல்லுநர்கள், சிவில் சமூகம் மற்றும் தூதுவர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் பின்னர் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து, இலங்கைக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.