பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த ஊர் என்பதனால் பா.ஜ.க. குஜராத்தில் வெற்றிபெற்றுள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே பா.ஜ.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.