இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தங்களது விரிவான வியூகத்தை கனடா அண்மையில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கனடாவின் வியூகத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த உரையாடலில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.
சீனாவின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் எழுந்துள்ள சவால்கள் பட்டியலிட்டு வியூக கொள்கையை கனடா அண்மையில் வெளியிட்டது.