இடஒதுக்கீடு முறை மூலம் பாகுபாட்டை ஊக்குவிப்பது ஜாதிய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சட்டக் கல்லூரி மாணவரான சிவானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
சட்ட மாணவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதை போன்று இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதில் பொதுநலம் இருப்பதாக நீதிமன்றத்திற்கு தெரியவில்லை என்றும் இதில் மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அவ்வாறு திரும்பப்பெறவில்லை என்றால் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.