தேசிய டிஜிட்டல் கொள்கை துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாடு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய சபையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாத காரணத்தினால் இலங்கை உலகின் ஏனைய நாடுகளை விட பின்தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்காக அறிஞர்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் என ஏராளமானோர் இணைந்துள்ளனர்.