தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பேசாலை,வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இதேவேளை இவர்களை நேற்று தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு,16 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.