போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்களை விடுவிக்க விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய சிறுவர் நலன்புரி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு, பொலிஸ் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் கலந்தாலோசித்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அதன் தலைவர் உதய குமார குறிப்பிட்டுள்ளார்.