இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஒப்பந்தம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இன்று (திங்கட்கிழமை) வவுனியா பல்கலைக்கழகத்தில் வியாபார கற்கைகள் பீட பீடாதிபதி கலாநிதி வை. நந்தகோபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் இணைந்து இதில் கைச்சாத்திட்டது.
இதன்படி வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவ பயிற்சியொன்றை வழங்கி எதிர்கால் சமுகமட்டத்தில் அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடிய தலைவர்களை உருவாக்கும் நோக்கோடு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரி. மங்களேஸ்வரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் திட்ட முகாமையாளர் ஜே. யூட் வோல்டன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.