ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹாரி பழங்குடியினர் பூஞ்ச் மற்றும் ரஜோரி ஆகிய எல்லை மாவட்டங்களில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘தன்யவாத் யாத்திரையை’ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
மலைவாழ் மக்களுக்கு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து ‘அசார்-இ-த்ரக்ஷ்தார’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியானது, புத்தல், கோடரங்கா, தர்ஹால், ரஜோரி, தானா மண்டி, ஸ்ரான்கோட், மண்டி, மெந்தர், பூஞ்ச் மற்றும் மஞ்சகோட் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தது.
உள்ளூர் உறுப்பினர்கள், தலைவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், அரசியல் மற்றும் சமூகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பேரணி வெற்றிபெற முக்கியப் பங்காற்றினர்.
இந்தப் பேரணியில் முக்கியமாக, மெந்தாரில் பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து குதிரைகளில் அணிவகுத்திருந்தனர்.
அதேவேளை, நவ்ஷேரா, சுந்தர்பானி மற்றும் கலகோட் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொண்டாட்டப் பேரணிகளுக்குப் பிறகு, காஷ்மீரின் கர்னா, உரி, திங்தார், குப்வாரா, பாரமுல்லா மற்றும் பிற பகுதிகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இதுபோன்ற பேரணிகள் நடத்தப்படும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.