சீன தொழில்நுட்ப நிறுவனங்களான ஹுவாவி, ஷிட் கோர்ப்ஸ், ஹிக்விஷன் ஆகிய நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவின் பேரில் உளவு நடவடிக்கைகளுக்காகவும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக மனித உரிமை குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
சீனாவின் டிஜிட்டல் சர்வாதிகாரத்தின் தந்திரோபாயங்களுக்கு ஐரோப்பிய நகரங்கள் பலியாகுமென எதேச்சதிகாரத்திற்கு எதிரான குரல்கள் தெரிவிக்கின்றன.
அதன்காரணமாகவே, கடந்த 2020ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கம் 5 சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களை தமது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பவையாக அடையாளப்படுத்தி நடவடிக்கைகளை எடுத்திருந்தது என்றும் அக்குரல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஹுவாவி உள்ளிட்ட சீனாவின் ஏனைய சில வணிக நிறுவனங்கள் மூலம் ஆப்பிரிக்காவில் தொழில்நுட்ப உளவு பார்க்கும் சீனாவின் செயற்பாடுகளை கருத்திற்கொள்கின்றபோது, ஐரோப்பாவிலும் அவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
செர்பியாவில் முக அங்கீகார தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு கமராக்களை வாங்குவதற்கான அரசாங்கத்தின் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி ஹுவாவி நிறுவனமானது, ஐரோப்பாவிற்குள் பிரவேசித்துள்ளது.
எவ்வாறாயினும், செர்பிய குடிமக்கள் தொடர்பான முக்கியமான மரபணுத் தரவுகளை சீன அரசாங்கம் கையகப்படுத்துவது குறித்து வெளிப்படையாக இருக்குமாறு பல நிறுவனங்கள் செர்பிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
2017 பாதுகாப்பான நகர மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விளைவாக குறைந்தது 8000 கமராக்கள் வாங்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை தனது நாட்டுக்குள் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, மாட்ரிட்டின் புறநகரில் அமைந்துள்ள நகரத்தில் உள்ளுர் அரசாங்கத்துடன் இணைந்து காவல்துறைக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், நகரத்தில் குற்றங்களை குறைப்பதற்கும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது.
இவ்வாறான நிலையில், சீனாவின் அரசாங்கம் பொது நிறுவனங்கள், பொது மக்கள் மீது எச்சரிக்கையாக இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த விடயங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதோடு தமக்கு எதிராக பயன்படுத்தப்படும் விடயங்களுக்கும் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.
முன்னதாக ஜூன் மாதம், உள்ளுர் அதிகாரிகளால் கொரோனா கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வெளிப்படையாக துஷ்பிரயோகம் செய்ததற்காக நாடு தழுவிய எதிர்ப்பு போராட்டங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.