அம்பாறை மாவட்டத்தின் கல்முனை திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக நேற்று (சனிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், எம்.ஏ.சுமந்திரன், இ இராசமாணிக்கம் சாணக்கியன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சமூக செயற்பாட்டாளர் செல்வராஜா கணேஸ் ,மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இது தவிர மக்கள் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் சார்பிலான கேள்விகளும் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.