நீளும்-ஜீலும் நீர்மின்சாரத் திட்டத்தின் சுரங்கப்பாதை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (நேப்ரா) தலைவர் தௌசீப் ஃபரூக்கி எச்சரித்துள்ளார்.
ஜூலை மாதம் சுரங்கப்பாதை மூடப்பட்டதில் இருந்து மின்சார நுகர்வோர் ஒவ்வொரு மாதமும் 10பில்லியன் ரூபா செலுத்துவதாகவும் கூறிய அவர் இந்த சுரங்கப்பாதை ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நுகர்வோர் 120பில்லியன் இழப்பை சந்திக்க நேரிடும்’ என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த சுரங்கப்பாதையின் சேதத்தை சரிசெய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் சுரங்கப்பாதை உடைந்து விழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், சுரங்கப்பாதையில் மறுசீரமைப்பு பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என்று தான் நம்புவதாக திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டதோடு, சுரங்கப்பாதையை ஆய்வுசெய்த சர்வதேச நிபுணர்கள் குழு முதற்கட்ட அறிக்கைகள் இரண்டைச் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுரங்கப்பாதை சரிவதற்கான எட்டு காரணங்களை குறித்த குழுவினர் கண்டறிந்துள்ளதோடு இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பு எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்றும் அக்குழுவினர் குறிப்பிட்டனர்.
இத்திட்டம் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்திருப்பதாலும், அதற்கான சர்வதேச கடன்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டதாலும், நிதியுதவியின்றி முடிக்கப்பட்டதாக அக்குழு குறிப்பிட்டுள்ளது.
செனட்டர் அசாத் ஜுனேஜோ, சுரங்கப்பாதையின் ‘முழுமையான ஆய்வுக்கு’ அழைப்பு விடுத்ததோடு, நந்திப்பூர் மின் உற்பத்தி நிலையம் குறித்தும் குழுவிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
புதிய கேள்விப்பத்திர மற்றும் திட்டத்திற்கான ஏலப் பணிகளை ஒரு மாதத்திற்குள் முடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த திட்டம் சம்பந்தமாக, செனட்டர் அப்ரோ கூறுகையில், நந்திபூர் மின் உற்பத்தி நிலைய அதிகாரிகள் மட்டுமல்ல, மின் பிரிவின் அதிகாரிகளும் கூட குழுவின் கூட்டங்களில் திருப்திகரமான பதில்களை வழங்க முடியவில்லை.
நந்திப்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் அதிகாரிகளின் கேள்விகளுக்கு ‘சம்பந்தமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதில்களை’ வழங்காததற்காக மின்வாரிய பிரிவு அதிகாரிகள் அவர்களை கடுமையாக சாடியுள்ளனர்.
குழுவின் உறுப்பினர்கள் பாகிஸ்தான் ‘எலக்ட்ரிக் பவர்’ கம்பெனியின் செயல்திறன் குறித்து அதிருப்தி தெரிவித்தனர் மற்றும் சிலர் வேறு விடயங்களையும் பரிந்துரைத்தனர்.
நிலைக்குழுவின் தலைவர் சைஃபுல்லா அப்ரோ, ‘மின்சார நிறுவனத்தை சட்டவிரோத செயல்களில் இருந்து ஈடுபட்டமையை வெளிப்படுத்துவதற்கு தயங்கப்போவதில்லை’ என்றார். ஏ
ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட இலத்திரணியில் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2015இல் காலாவதியாகிவிட்ட போதிலும், ஏன் புதுப்பிக்கப்படவில்லை என்பதை குழுவின் உறுப்பினர்கள் அறிய விரும்பினர். குழுவின் கூட்டங்களில் பொறுப்பான பதிலளிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.